Common English Phrases Using the Verb 'Keep' – With Tamil Meaning
இந்தப் பக்கத்தில், வை என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி பொதுவான சொற்றொடர்கள் மற்றும் வாக்கியக் குறிப்புகள் வழங்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு சொற்றொடரிலும் இங்லீஷ் மற்றும் தமிழ்ப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் பேசுபவர்களுக்கு தினசரி உரையாடல்களில் தங்களின் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்த உதவும்.
Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb keep in different tenses and practical daily situations. Each phrase is presented in English with the Tamil equivalent so that Tamil speakers can understand and use them confidently in real conversations.
Verb definition and tenses
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | keep | வை |
| Past | kept | வைத்தேன் |
| Participle | kept | வைத்திரு- |
| Continuous | keeping | வைத்துக் கொண்டிரு- |
kept - வைத்திரு- மற்றும் keeping- வைத்துக் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.
Example Sentences in different tense forms
The examples include simple present, past, future, continuous, and imperative forms to help you see how "keep" changes in different contexts. These are practical sentences you can start using immediately—whether at home, school, work, or while travelling abroad.
- You keep - நீ வை.
- She keeps - அவள் வைக்கிறாள்.
- We kept - நாங்கள் வைத்தோம்.
- You only kept - நீங்கள் தான் வைத்தீர்கள்.
- He will keep - அவர் வைப்பார்.
- I am keeping - நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
- I was keeping - நான் வைத்துக் கொண்டிருந்தேன்.
- I would be keeping - நான் வைத்துக் கொண்டிருப்பேன்.
- I have kept - நான் வைத்திருக்கிறேன்.
- I had kept - நான் வைத்திருந்தேன்.
- I would have kept - நான் வைத்திருப்பேன்.
- I have been keeping - நான் வைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
- I had been keeping - நான் வைத்துக் கொண்டிருந்திருந்தேன்.
- I would have been keeping - நான் வைத்துக் கொண்டிருந்திருப்பேன்.
Go to tense forms Go to Practical Phrases
Questions and Responses
- May I keep this? - நான் இதை வைக்கலாமா?
- Shall I keep this? - நான் இதை வைக்கட்டுமா?
- Ok. You go and keep that - சரி. நீ போய் அதை வை.
- Can you keep this?- நீங்கள் இதை வைக்க முடியுமா?
- Can’t you keep that? - நீங்கள் அதை வைக்க முடியாதா?
- Yes. I can’t. Because I am too short - ஆம். என்னால் முடியாது. ஏனெனில் நான் மிகவும் குள்ளம்.
- I am tall. So I can keep on the almirah - நான் உயரமானவள். ஆதலால் என்னால் அலமாரியின் மேல் வைக்க முடியும்.
- How are you going to keep? - நீங்கள் எப்படி வைக்கப் போகிறீர்கள்?
- I don’t know how to keep - எப்படி வைப்பதென்று எனக்குத் தெரியாது.
- Why are you going to keep? - நீங்கள் ஏன் வைக்கப் போகிறீர்கள்?
- Teacher told me to keep - ஆசிரியர் என்னை வைக்கப் சொன்னார்கள்.
- Who told you to keep? - உன்னை வைக்கச் சொன்னது யார்?
- Nobody told me to keep - யாரும் என்னை வைக்கச் சொல்லவில்லை.
- Somebody told me to keep - யாரோ என்னை வைக்கச் சொன்னார்கள்.
- Mother told me to keep - அம்மா என்னை வைக்கச் சொன்னார்கள்.
- Shall I keep it in the kitchen? - நான் அதை அடுப்பங்கறையில் வைக்கட்டுமா?
- Keep the fruits on the table- பழங்களை மேஜைமேல் வை.
- Where did you keep this? - நீங்கள் இதை எங்கே வைத்தீர்கள்?
- I kept this there - நான் இதை அங்கு வைத்தேன்.
- I kept this in Mumbai - நான் இதை மும்பையில் வைத்தேன்.
- How did you keep? - நீ எப்படி வைத்தாய்?
- I kept with a long stick - நான் ஒரு நீளக் குச்சியால் வைத்தேன்.
- Who kept that? - யார் அதை வைத்தது?
- Did you keep? - நீங்கள் வைத்தீர்களா?
- Why did you keep? - நீங்கள் ஏன் வைத்தீர்கள்?
- For whom you kept? - நீ யாருக்காக வைத்தாய்?
- I kept for my daughter - நான் எனது மகளுக்காக வைத்தேன்.
- When did you keep? - நீங்கள் எப்பொழுது வைத்தீர்கள்?
- I kept two days before - நான் இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்தேன்.
- How much you kept? - நீங்கள் எவ்வளவு வைத்தீர்கள்?
- I kept only this much - நான் இவ்வளவு தான் வைத்தேன்.
- How many you kept? - நீ எத்தனை வைத்தாய்?
- How many did you keep? - நீ எத்தனை வைத்தாய்?
- I kept two only - நான் இரண்டு மட்டும் தான் வைத்தேன்.
- I kept some dry fruits - நான் கொஞ்சம் உலர் பழங்கள் வைத்தேன்.
- I kept one or two apples - நான் ஒன்றிரண்டு ஆப்பிள் பழங்கள் வைத்தேன்.
- I kept few guavas - நான் சில கொய்யாப்பழங்கள் வைத்தேன்.
- Who kept the money? - பணத்தை யார் வைத்தார்கள்?
- Hari kept the money for paying exam fees - தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்காக ஹரி பணத்தை வைத்தான்.
- Will you keep that? - நீ அதை வைப்பாயா?
- I’ll keep this - நான் இதை வைப்பேன்.
- Won’t you keep that? - நீ அதை வைக்க மாட்டாயா?
- I won’t keep that - நான் அதை வைக்க மாட்டேன்.
- How could she keep? - அவள் எப்படி வைக்க முடியும்?
- How would she keep? - அவள் எப்படி வைப்பாள்?
- Somebody would help her to keep - யாராவது அவளுக்கு வைக்க உதவுவார்கள்.
- Who has kept? - யார் வைத்திருக்கிறார்கள்?
- You must have kept - நீ கட்டாயம் வைத்திருக்கவேண்டும்.
- I have kept - நான் வைத்திருக்கிறேன்.
- Ram had kept - ராம் வைத்திருந்தான்.
- Who would have kept the money? - பணத்தை யார் வைத்திருப்பார்கள்?
- Arun would have kept the money - பணத்தை அருண் வைத்திருப்பான்.
Go to tense forms Go to Questions and Responses
Practical Phrases
- Please keep this - தயவுசெய்து இதை வைக்கவும்.
- Don’t keep that - அதை வைக்காதீர்கள்.
- Let me keep - என்னை வைக்க விடுங்;கள்.
- Let me keep first - முதலில் என்னை வைக்க விடுங்;கள்.
- I won’t let you to keep - நான் உன்னை வைக்க விடமாட்டேன்.
- I can keep the students quiet - என்னால் மாணவர்களை அமைதியாக வைத்திருக்க முடியும்.
- I can’t keep them quiet for long - என்னால் அவர்களை நீண்ட நேரம் அமைதியாக வைத்திருக்க முடியாது.
- Keep one apple and some grapes - ஒரு ஆப்பிளும் கொஞ்சம் திராட்சையும் வை.
- Keep a handful of pomegranate pearls - ஒரு கைப்பிடி மாதுளை முத்துகள் வைக்கவும்.
- Keep a bowl - ஒரு கிண்ணம் வையுங்கள்.
- Keep a cup of sugar - ஒரு கப் சர்க்கரை வை.
- Don’t keep chocolate - சாக்லேட் வைக்காதே.
- Keep either this or that - இதை வை அல்லது அதை வை.
- Keep neither this nor that - இதையும் வைக்காதே அதையும் வைக்காதே.
- Don’t keep anything - எதையும் வைக்காதீர்கள்.
- Keep both - இரண்டையும் வைக்கவும்.
- He kept both - அவர் இரண்டையும் வைத்தார்.
- He has kept both - அவர் இரண்டையும் வைத்திருக்கிறார்.
- Keep only one - ஒன்று மட்டும் வை.
- Keep one more - இன்னொன்று வைத்துக் கொள்ளுங்கள்.
- Keep another one - வேறொன்று வையுங்கள்.
- Keep whatever - எதுவேனாலும் வை.
- Keep aside - ஒதுக்கி வை.
- Keep this in your office - இதை தங்கள் அலுவலகத்தில் வையுங்கள்.
- Keep only the necessary things - தேவையானதை மட்டும் வை.
- Keep tablet without fail - மாத்திரையை தவறாமல் வை.
- Keep that book - அந்தப் புத்தகத்தை வை.
- Don’t forget to keep lunch for them - அவர்களுக்கு மதிய உணவு வைக்க மறக்காதே.
- You must keep - நீ அவசியம் வைக்கவேண்டும்.
- You mustn’t keep- நீ கட்டாயம் வைக்கக் கூடாது.
- You should keep - நீ கட்டாயம் வைக்கவேண்டும்.
- You shouldn’t keep - நீ கட்டாயம் வைக்கக் கூடாது.
- Where did you keep? - நீங்கள் எங்கே வைத்தீர்கள்?
- Arun won’t have kept the money - பணத்தை அருண் வைத்திருக்க மாட்டான்.
- Ashok might have kept the money - பணத்தை அசோக் தான் வைத்திருப்பான்.
- Keep for me too - எனக்;கும் வையுங்கள்.
- You keep yourself - நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.
- That’s a nice bike! Keep it clean - அது ஒரு நல்ல பைக். அதை சுத்தமாக வைத்துக்கொள்.
- He always keeps himself neat and tidy - அவர் எப்பொழுதும் தன்னை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்கிறார்.
- Keep trying - you’ll find something - தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஏதாவது கண்டுபிடிப்பீர்கள்.
- This is the right time. I keep telling you to start - இது சரியான நேரம். தொடங்கு என்று உன்னை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
- We need to keep talking about this - இதைப்பற்றி நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது அவசியம்.
- My child keeps waking me up in the middle of the night - என் குழந்தை என்னை நள்ளிரவில் எழுப்பிக் கொண்டேயிருக்கிறாள்.
- Keep the battery from running out - பேட்டரி தீர்ந்து போகாமல் வைத்துக்கொள்.
- Keep on digging! We’ll find it! - தோண்டிக்கொண்டே இருங்கள். நாம் அதைக் கண்டுபிடிப்போம்.
- She’s too fast. I can’t keep up with her! - அவள் மிக வேகமாக இருக்கிறாள். என்னால் அவளுடன் தொடர முடியாது.
- I’m just going to the toilet. Can you keep an eye on my bags? - நான் கழிப்பறைக்குத் தான் செல்கிறேன். உன்னால் என் பைகளை கண்கானிக்க முடியுமா?
- Keep in mind that he can’t hear well, so you’ll have to speak louder - அவரால் நன்றாக கேட்க இயலாது என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆதலால் நீங்கள் சத்தமாக பேசவேண்டும்.
- keep costs down - செலவுகளைக் குறைக்கவும்
- Keep it a secret! Don’t tell anyone! - அதை ரகசியமாக வைத்திரு. யாரிடமும் சொல்லாதே.
- I’m keeping in touch with school friends - நான் பள்ளிக்கூட நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.
- Keep up the good work! - நல்ல காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள்.
- Keep the change! - சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள்.
- Keep quiet! This is a library! - அமைதியாக இரு. இது நூலகம்.
- keep your home neat and tidy - உன்னுடைய வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வை.
- Ok. Bye.
Go to tense forms Go to Practical Phrases Go to Questions and Responses
Summary (English + Tamil explanation):
You have now learned many useful English phrases with keep that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் வை என்ற வினைச்சொல்லுடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used verbs like "keep" forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the verb throw
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | throw | எறி |
| Past | threw | எறிந்தேன் |
| Participle | thrown | எறிந்திரு- |
| Continuous | throwing | எறிந்து கொண்டிரு- |
