Common English Phrases Using the Verb 'Put' – With Tamil Meaning
இந்தப் பக்கத்தில், போடு என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி பொதுவான சொற்றொடர்கள் மற்றும் வாக்கியக் குறிப்புகள் வழங்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு சொற்றொடரிலும் இங்லீஷ் மற்றும் தமிழ்ப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் பேசுபவர்களுக்கு தினசரி உரையாடல்களில் தங்களின் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்த உதவும்.
Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb "Put" in different tenses and practical daily situations. Each phrase is presented in English with the Tamil equivalent so that Tamil speakers can understand and use them confidently in real conversations.
Verb definition and tenses
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | put | போடு |
| Past | put | போட்டேன் |
| Participle | put | போட்டிரு- |
| Continuous | putting | போட்டுக் கொண்டிரு- |
பொதுவாக put - வாக்கியங்களில் adjectives, prepositions, place - டன் சேர்ந்து பொருள் தருகிறது.
Example Sentences in different tense forms
The examples include simple present, past, future, continuous, and imperative forms to help you see how "put" changes in different contexts. These are practical sentences you can start using immediately—whether at home, school, work, or while travelling abroad.
Simple Tenses
- Present: I put the keys in the bowl - நான் சாவியை கிண்ணத்தில் வைக்கிறேன்.
- Past: He put rose plants arms around her - அவன் எல்லாவற்றையும் அவருடைய (கடவுளுடைய) கைகளில் கொடுத்தான்
- Future: They will put up a new sign - அவர்கள் ஒரு புதிய அடையாளத்தை வைப்பார்கள்.
Continuous (Progressive) Tenses
- Present Continuous: We are putting on a play - நாங்கள் ஒரு நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
- Past Continuous: I was putting dinner on the table when the phone rang - தொலைபேசி ஒலித்தபோது நான் இரவு உணவை மேஜையில் வைத்துக்கொண்டிருந்தேன்.
- Future Continuous: She will be putting the finishing touches on the project - அவள் திட்டத்திற்கான இறுதிக் கட்ட மெருகூட்டல்களைச் செய்வாள்.
Perfect Tenses
- Present Perfect: I have put a lot of thought into this - நான் இதைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன்.
- Past Perfect: She had put the documents away before he arrived - அவன் வருவதற்கு முன்பே அவள் ஆவணங்களை தூர வைத்துவிட்டாள்.
- Future Perfect: By next week, we will have put the entire exhibit together - அடுத்த வாரத்திற்குள், முழு கண்காட்சியையும் ஒன்றாக இணைத்து வைத்திருப்போம்.
Perfect Continuous Tenses
- Present Perfect Continuous: They have been putting out fires all day - அவர்கள் நாள் முழுவதும் தீயை அணைத்துக் கொண்டிருக்கின்றனா்.
- Past Perfect Continuous: He had been putting off his homework for hours - அவன் தனது வீட்டுப்பாடத்தை மணிக்கணக்கில் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தான்.
- Future Perfect Continuous: By the end of the year, she will have been putting in overtime for months - வருட இறுதிக்குள், அவள் பல மாதங்களாக கூடுதல் நேரத்தைச் செலவிட்டிருப்பாள்.
Go to tense forms Go to Practical Phrases
Questions and Responses
- Where shall I put my things? - என்னுடைய பொருட்களை எங்கே வைப்பது?
- Put your things here - உங்களுடைய பொருட்களை இங்கே வைக்கவும்.
- Can you please put your things away? - தயவுசெய்து தங்கள் பொருட்களை தள்ளி வைக்க முடியுமா?
- Where should I put these keys? - இந்த சாவிகளை நான் எங்கே வைக்க வேண்டும்?
- Could you put the groceries on the counter? - மளிகைப் பொருட்களை கவுண்டரில் வைக்க முடியுமா?
- What did you put in your coffee? - உன் காபியில் என்ன போட்டாய்?
- Do you need to put on your glasses to read? - படிப்பதற்கு கண்ணாடி போட வேண்டுமா?
- Why don't you put on a sweater? - நீ ஏன் ஸ்வெட்டர் போடக்கூடாது?
- How long can we put off telling them the news? - அவர்களுக்குச் செய்தியைச் சொல்வதை எவ்வளவு காலம் தள்ளிப் போட முடியும்?
- Did you put off your dentist appointment again? - நீங்கள் மீண்டும் உங்கள் பல் மருத்துவரை சந்திப்பதைத் தள்ளிப் போட்டீர்களா?
- How can I put my point across more clearly? - எனது கருத்தை இன்னும் தெளிவாக எப்படி வெளிப்படுத்துவது?
- What proposal did you put forward in the meeting? - கூட்டத்தில் நீங்கள் என்ன முன்மொழிவை முன்வைத்தீர்கள்?
Go to tense forms Go to Questions and Responses
Practical Phrases
- Put away - தூரப் போடு.
- Put that down - அதை கீழே போடு.
- I have put in an application for college admission - கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பம் போட்டுள்ளேன்.
- Let’s put off the meeting - கூட்டத்தை தள்ளி வைப்போம்.
- I would like to put forward a suggestion - நான் ஒரு ஆலோசனையை முன் வைக்க விரும்புகிறேன்.
- Put out the fire - தீயை அணைக்கவும்.
- I can’t put up with the noise in the dormitory - என்னால் விடுதியில் உள்ள சத்தத்தை தாங்க முடியவில்லை.
- I put a lot of work in the design of website - வலைதள வடிவமைப்பில் நான் நிறைய உழைப்பை போட்டுள்ளேன்.
- Put the book back in the shelf - புத்தகத்தை மீண்டும் அலமாரியில் வைக்கவும்.
- Just put in the key and turn it - சாவியை உள்ளே விட்டு திருப்பவும்.
- Put up the file to the collector - கலெக்டரிடம் கோப்பை வைக்கவும்.
Go to tense forms Go to Practical Phrases Go to Questions and Responses
Summary (English + Tamil explanation):
You have now learned many useful English phrases with put that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் போடு என்ற வினைச்சொல்லுடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used verbs like "put" forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the verb cut
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | cut | வெட்டு |
| Past | cut | வெட்டினேன் |
| Participle | cut | வெட்டியிரு- |
| Continuous | cutting | வெட்டிக்கொண்டிரு- |
