The Milkmaid and Her Pail பால்காரியும் அவளுடைய பால் கேனும்
இந்தப் பக்கம், ஈசோப்பின் நீதிக்கதைகளில் இருந்து "பால்காரியும் அவளுடைய பால் கேனும்" என்ற கதையை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்கிறது. இந்தக் கதையில் உள்ள சிறு ஆங்கில வாக்கியங்களைக் கற்று சுலபமாக ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். மேலும் ஒரு நல்ல வாழ்க்கையை நடத்துவதற்கு "உங்கள் கோழி குஞ்சுகள் பொரிப்பதற்கு முன்பு எண்ண வேண்டாம்." என்ற கதையின் நீதி நெறியையும் உங்களுக்குள் விதைக்கவும்.
ஈசோப்பின் கட்டுக்கதைகள் என்பது கிமு 620 முதல் 564 வரை பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த பண்டைய கிரேக்க கதைசொல்லியான ஈசோப்பால் கூறப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும். இவை விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருட்களை மனித குணாதிசயங்களுடன் இணைத்து ஒரு தார்மீக பாடத்தைக் கற்பிக்கின்றன. இந்தக் கதைகள், விடாமுயற்சி, புத்திசாலித்தனம் மற்றும் கருணை போன்ற நற்பண்புகளை வலியுறுத்துகின்றன, மேலும் பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஊடகங்களில் மீண்டும் சொல்லப்பட்டு, அடிப்படை தார்மீகக் கல்வியாகச் செயல்படுகின்றன.
This page tells the story "Milk maid and her pail" from Aesop’s fables in English and Tamil. Learn Spoken English with ease by learning small English sentences in this story and also instill the moral of the story "Do not count your chickens before they are hatched" in you for leading a good life.
Aesop's fables are a collection of short tales, attributed to Aesop, an ancient Greek storyteller, who lived in ancient Greece between 620 and 564 BCE, that feature animals and inanimate objects with human traits to teach a moral lesson. These stories, emphasize virtues like perseverance, cleverness, and kindness, and have been retold for centuries in various media, serving as foundational moral education.
Story in English
Molly, the milkmaid’s job was 1to milk the cows and 2sell the milk at the market. 3She started thinking 4about the things she would spend her money on. 5While walking to the market, 6she spotted a chicken and 7thought that she could earn more money 8by buying a chicken and selling its eggs. 9She started to think 10how jealous she could make the other milkmaid 11with all the things she could buy from the milk and egg money. 12She started to skip in excitement, 13and soon the milk spilled over. 14She went home 15with empty pails and no money. 16Her mother then reminds her that 17she shouldn’t count her chicken 18until they hatch.
Story in Tamil
பால்காரி மோலியின் வேலை, பால் கறப்பது மற்றும் பாலை சந்தையில் விற்பனை செய்வது. அவள் அவளுடைய பணத்தை செலவளிக்கும் விசயங்களைப் பற்றி அவள் சிந்திக்க ஆரம்பித்தாள். அவள் சந்தைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, ஒரு கோழியைக் கண்டாள், மேலும் ஒரு கோழியை வாங்கி அதன் முட்டைகளை விற்பதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என நினைத்தாள். பால் மற்றும் முட்டை பணத்திலிருந்து அவள் வாங்கக்கூடிய எல்லா பொருட்களையும் வைத்து, அவளால் மற்ற பால்காரிகளை எப்படி பொறாமை பட வைக்கமுடியும் என அவள் யோசிக்க ஆரம்பித்தாள். அவள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தவுடனே பால் சிந்தியது. அவள் பணம் இல்லாமல் காலி பால் கேனுடன் வீட்டிற்குச் சென்றாள். அதன் பிறகு அவளுடைய தாய், அவளுடைய கோழி குஞ்சுகளை அவைகள் பொரிக்கும் வரை அவள் எண்ணக்கூடாது என அவளுக்கு நினைவு+ட்டினாள்.
Moral : Do not count your chickens before they are hatched.
ஒழுக்கநெறி : உங்கள் கோழி குஞ்சுகள் பொரிப்பதற்கு முன்பு எண்ண வேண்டாம்.
Small sentences in English and Tamil
Meaning - பொருள்
Sl.No
English
தமிழ்
1.
to milk the cows
பால் கறப்பது
2.
sell the milk at the market.
பாலை சந்தையில் விற்பனை செய்
3.
She started thinking
அவள் சிந்திக்க ஆரம்பித்தாள்
4.
about the things she would spend her money on.
அவள் அவளுடைய பணத்தை செலவளிக்கும் விசயங்களைப் பற்றி
5.
While walking to the market
சந்தைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது
6.
she spotted a chicken
அவள் ஒரு கோழியைக் கண்டாள்
7.
thought that she could earn more money
அதிக பணம் சம்பாதிக்க முடியும் என அவள் நினைத்தாள்.
8.
by buying a chicken and selling its eggs.
ஒரு கோழியை வாங்கி அதன் முட்டைகளை விற்பதன் மூலம்
9.
She started to think
அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
10.
how jealous she could make the other milkmaid
அவளால் மற்ற பால்காரிகளை எப்படி பொறாமை பட வைக்கமுடியும்.
11.
with all the things she could buy from the milk and egg money.
பால் மற்றும் முட்டை பணத்திலிருந்து அவள் வாங்கக்கூடிய எல்லா பொருட்களையும் வைத்து
12.
She started to skip in excitement
அவள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தாள்.
13.
soon the milk spilled over.
உடனே பால் சிந்தியது.
14.
She went home
அவள் வீட்டிற்குச் சென்றாள்.
15.
with empty pails and no money.
பணம் இல்லாமல் காலி பால் கேனுடன்
16.
Her mother then reminds her
அதன் பிறகு, அவளுடைய தாய் அவளுக்கு நினைவு+ட்டினாள்.
17.
she shouldn’t count her chicken
அவளுடைய கோழி குஞ்சுகளை அவள் எண்ணக்கூடாது.
18.
until they hatch.
அவைகள் பொரிக்கும் வரை
Quiz – Answer the following
What happened to the milk?
spilled
spoiled
Who advised the milkmaid?
father
mother
neighbour
How she planned to earn more money?
By selling eggs
By selling more milk
By selling chicken
None of the above
Quiz – True or False
The milk maid saw a goat on her way. (True / False)
The milk maid returned with lot of money. (True / False)
She spilled the milk. (True / False)
Listening Practice
இந்த ஆடியோவில் உள்ள கதையைக் கேட்டு, ஆங்கிலத்தில் பேசும் திறனை வளா்ப்பதோடு தங்களின் கவனித்துக் கேட்கும் திறனையும், ஆங்கில உச்சரிப்பையும் மேம்படுத்துங்கள்.
The Milkmaid and Her Pail - பால்காரியும் அவளுடைய பால் கேனும்
🎧 Listen to the Story - கதையைக் கேளுங்கள்
Finished. Click ▶ to replay.
Summary (English + Tamil explanation):
You have now learned many simple sentences from this story in English that can be used in daily conversation. And this story reminded you, as you have learned in your school studies, "Do not count your chickens before they are hatched".
இந்தக் கதையிலிருந்து நீங்கள் அன்றாட உரையாடலில் பயன்படுத்தக்கூடிய பல எளிய ஆங்கில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டீர்கள். மேலும், உங்கள் பள்ளிப் படிப்பில் கற்றுக்கொண்டது போல், "உங்கள் கோழி குஞ்சுகள் பொரிப்பதற்கு முன்பு எண்ண வேண்டாம்." என்ற நீதியை இந்தக் கதை உங்களுக்கு நினைவூட்டியது.
Practice tips
Keep practising by reading the story aloud. And listen to the story and improve your listening skill and pronunciation.