Common English Phrases Using the Verb 'Ask' – With Tamil Meaning
இந்தப் பக்கத்தில், கேள் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி பொதுவான சொற்றொடர்கள் மற்றும் வாக்கியக் குறிப்புகள் வழங்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு சொற்றொடரிலும் இங்லீஷ் மற்றும் தமிழ்ப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் பேசுபவர்களுக்கு தினசரி உரையாடல்களில் தங்களின் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்த உதவும்.
Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb ask in different tenses and practical daily situations. Each phrase is presented in English with the Tamil translation so that Tamil speakers can understand and use them confidently in real conversations.
Verb definition and tenses
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | (வாயால்) கேள் | |
| Past | கேட்டேன் | |
| Participle | கேட்டிரு- | |
| Continuous | கேட்டுக் கொண்டிரு- |
asked - கேட்டிரு- மற்றும் asking- கேட்டுக் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்
Example Sentences in different tense forms
The examples include simple present, past, future, continuous, and imperative forms to help you see how “go” changes in different contexts. These are practical sentences you can start using immediately—whether at home, school, work, or while travelling abroad.
- I ask - நான் கேட்கிறேன்.
- He asks - அவன் கேட்கிறான்.
- I asked - நான் கேட்டேன்.
- I will ask - நான் கேட்பேன்.
- I am asking - நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
- I was asking - நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
- I will be asking - நான் கேட்டுக் கொண்டிருப்பேன்.
- I have asked - நான் கேட்டிருக்கிறேன்.
- I had asked - நான் கேட்டிருந்தேன்.
- I would have asked - நான் கேட்டிருப்பேன்.
- I have been asking - நான் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.
- I had been asking - நான் கேட்டுக் கொண்டிருந்திருந்தேன்.
- I would have been asking - நான் கேட்டுக் கொண்டிருந்திருப்பேன்.
Go to tense forms Go to Practical Phrases
Questions and Responses
Plans & Intentions
- I shall ask - - நான் கேட்பேன்.
- We shall ask - நாங்கள் கேட்போம் .
- He will ask - அவர் கேட்பார்.
- They will ask - அவர்கள் கேட்பார்கள்.
- You have to ask - நீ கேட்க வேண்டும்.
- I will ask tomorrow - நாளை நான் கேட்பேன்.
- How would you ask? - நீங்கள் எப்படிக் கேட்பீர்கள்?
- Shall I ask them after dinner? - இரவு உணவுக்குப் பிறகு நான் அவர்களைக்; கேட்கட்டுமா?
- You have to ask now - இப்பொழுது நீ கேட்க வேண்டும்.
- Let's ask the teacher - ஆசிாியாிடம் கேட்போம்
- Let me ask - என்னைக் கேட்கவிடுங்கள்.
- Ask her when could she come - அவள் எப்பொழுது வரமுடியும் என்று அவளைக் கேள்.
- Ask her when would he come - அவள் எப்பொழுது வருவாள் என்று அவளைக் கேள்.
- Let’s ask - நாம் கேட்கலாம்.
- Should I ask? - நான் கட்டாயம் கேட்கவேண்டுமா?
- Shall I ask her to come? - நான் அவளை வரச்சொல்லட்டுமா?
- Would I ask you? - நான் உங்களைக் கேட்பேனா?
Plans & Intentions Negative Questions & Responses
Suggestions, Requests & Offers
- May I ask the time? - நான் நேரம் கேட்கலாமா?
- Shall I ask you? - நான் உங்களைக் கேட்கட்டுமா?
- May I ask one question? - நான் ஒரு கேள்வி கேட்கலாமா?
- You may ask - நீ கேட்கலாம்.
- You can ask - நீ கேட்கலாம் / உன்னால் கேட்க முடியும்.
- You only can ask him - உன்னால் மட்டும் தான் அவரைக் கேட்க முடியும்.
- You have to ask - நீங்கள் கேட்கவேண்டும்.
- You have to ask them - நீங்கள் அவர்களைக் கேட்கவேண்டும்.
- You ask about his job - நீங்கள் அவருடைய வேலையைப் பற்றிக் கேளுங்கள்;.
- You should ask - நீங்கள் கட்டாயம் கேட்கவேண்டும்.
- You must ask - நீங்கள் அவசியம் கேட்கவேண்டும்.
- I was asking Malar - நான் மலரைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
- Have they asked you money? - அவர்கள் உன்னிடம் பணம் கேட்டிருக்கிறார்களா?
- She asked me to help her - அவளுக்கு உதவும்படி அவள் என்னிடம் கேட்டாள்
Negative Questions & Responses
Plans & Intentions Suggestions, Requests & Offers
- Can't you ask him?- உன்னால் அவனிடம் கேட்க முடியாதா?
- Yes. I can’t ask him- ஆமாம். என்னால் அவனிடம் கேட்க முடியாது.
- No. I can ask - இல்லை. என்னால் கேட்க முடியும்.
- Won't you ask for help?- நீங்கள் உதவி கேட்க மாட்டீர்களா?
- I will ask only if necessary - தேவைப்பட்டால் மட்டுமே நான் கேட்பேன்.
- I won’t ask her - நான் அவளைக் கேடகமாட்டேன் -
- I didn’t ask her - நான் அவளைக் கேட்கவில்லை.
- You shouldn’t ask - நீங்கள் கட்டாயம் கேட்கக் கூடாது.
- You don’t ask them - நீ அவர்களைக் கேட்காதே.
- No.I didn’t ask - இல்லை.நான் கேட்கவில்லை.
- No.I never asked - இல்லை.நான் ஒருபோதும் கேட்கவில்லை.
- My teacher didn’t allow me to ask - கேட்பதற்கு என்னுடைய ஆசிாியை என்னை அனுமதிக்கவில்லை.
- Didn't you ask her yet? - நீங்கள் இன்னும் அவளிடம் கேட்கவில்லையா?
- Don't hesitate to ask if you want anything - உங்களுக்கு ஏதாவது வேண்டுமெனில் கேட்கத் தயங்காதீர்கள்.
- Don't be afraid to ask questions - கேள்விகள் கேட்கப் பயப்பட வேண்டாம்.
- Don't ask me for money - என்னிடம் பணம் கேட்காதே
- Don't ask me anything - என்னிடம் எதுவும் கேட்காதே
- I never asked for anything - நான் எதையும் கேட்டதில்லை.
- Didn’t you ask? - நீ கேட்கவில்லையா?
- Why didn’t you ask? - நீ ஏன் கேட்கவில்லை?
Go to tense forms Go to Questions and Responses
Practical Phrases
- I need to ask a question - நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
- We had to stop and ask directions - நாங்கள் நிறுத்தி வழி கேட்க வேண்டியிருந்தது.
- I would have given it to him, but he never asked - நான் அவனுக்குக் கொடுத்திருப்பேன், ஆனால் அவன் கேட்கவே இல்லை.
- Did you ask permission to leave? - வெளியே செல்ல அனுமதி கேட்டீா்களா?
- Ask the manager about the loan - மேலாளரிடம் கடனைப் பற்றிக் கேளுங்கள்.
- I will ask him about it tomorrow - நான் நாளை அவரிடம் அதைப் பற்றிக் கேட்பேன்.
- Ask him when the next plane leaves - அடுத்த விமானம் எப்போது புறப்படும் என்று அவரிடம் கேளுங்கள்.
- My son often ask me for money - என் மகன் அடிக்கடி என்னிடம் பணம் கேட்பான்.
- But, my daughter seldom ask me for money - ஆனால், என் மகள் என்னிடம் எப்போதாவதுதான் பணம் கேட்பாள்.
- I want to ask you a big favor - நான் உங்களிடம் ஒரு பெரிய உதவி கேட்க விரும்புகிறேன்.
- Ask her what she wants - அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேள்.
- Ask me something easier - என்னிடம் ஏதாவது எளிதானதைக் கேளுங்கள்.
- She asked him where he had been - அவன் எங்கே சென்றிருந்தான் என்று அவள் அவனிடம் கேட்டாள்.
- Ram had asked Hari to rent a car for them - தங்களுக்காக ஒரு காரை வாடகைக்கு எடுக்குமாறு ராம், ஹரியிடம் கேட்டிருந்தார்.
- The woman asked where I was - அந்தப் பெண் நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டாள்.
- Ask how much? - எவ்வளவு என்று கேள்.
- I asked how much? - நான் எவ்வளவு என்று கேட்டேன்.
- She asked how Mala was doing - மாலா எப்படி இருக்கிறாள் என்று அவள் கேட்டாள்.
- They have asked me - அவர்கள் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.
- We've been asked a number of times - எங்களிடம் பலமுறை கேட்கப்பட்டுள்ளது.
- I had asked some money - நான் கொஞ்சம் பணம் கேட்டிருந்தேன்.
- He asked me where everybody else was - மற்றவர்கள் எல்லாம் எங்கே என்று அவர் என்னிடம் கேட்டார்.
- Ask fast - வேகமாகக் கேட்கவும்.
- Ask slowly - மெதுவாகக் கேள்.
- Ask your father - உங்களுடைய அப்பாவைக் கேளுங்கள்.
- You have to ask now itself - நீங்கள் இப்பொழுதே கேட்க வேண்டும்.
- How many times did you ask? - நீ எத்தனை முறை கேட்டாய்?
- I have asked only once - நான் ஒரு முறை தான் கேட்டிருக்கிறேன்.
- Do you ask me? - நீ என்னைக் கேட்கிறாயா?
- Did you ask? - நீ கேட்டாயா?
- Did you ask me? - நீ என்னைக் கேட்டாயா?
- When did you ask? - நீ எப்பொழுது கேட்டாய்?
- Why did you ask? - நீங்கள் ஏன் கேட்டீர்கள்?
- Whom are you asking? - நீங்கள் யாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
- I am asking the vegetable vendor - நான் காய்கறி விற்பவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
- I was asking my mother - நான் என்னுடைய அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
- What for you asked? - எதற்காக நீங்கள் கேட்டீர்கள்?
- I asked the doctor about my father’s health - என்னுடைய அப்பாவின் ஆரொக்கியம் குறித்து நான் டாக்டரிடம் கேட்டேன்.
- When did you ask? - நீங்கள் எப்பொழுது கேட்டீர்கள்?
- I asked yesterday - நான் நேற்று கேட்டேன்.
- Ask me tomorrow - நாளை என்னிடம் கேள்.
Go to tense forms Go to Practical Phrases Go to Questions and Responses
Summary (English + Tamil explanation):
You have now learned many useful English phrases with ask that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் கேள் உடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used verbs like ask forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the verb hear
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | (காதால்) கேள் | |
| Past | கேட்டேன் | |
| Participle | கேட்டிரு- | |
| Continuous | கேட்டுக் கொண்டிரு- |
