Sentence Making
வாக்கியம் அமைத்தல்
This page helps learners to undersatand sentence making in English.
Parts of Speech / Types of Words
The parts of speech are eight.
பேச்சின்(வாக்கியத்தின்) பகுதிகள் எட்டு.
They are with example:
எடுத்துக்காட்டுடன் அவைகள்:
| வாக்கியத்தின் பகுதி | Parts of speech | E.g. - எ.கா |
|---|---|---|
| பெயர்ச்சொல் | Noun | Dr.சுப்பையா - Dr.Subbiah |
| மாற்றுப்பெயர் | Pronoun | அவர் - He |
| வினைச்சொல் | Verb | செய் - Do |
| (முன்)இடைச்சொல் | Preposition | உனக்காக - for you |
| பெயரடை | Adjective | நல்ல பெண் - good girl |
| வினையடை | Adverb | வேகமாக வா - come fast |
| வியப்பிடைச்சொல் | Interjection | வாவ்! - Wow! |
| இணைப்புச்சொல் | Conjunction | போகும் பொழுது - while going |
How to make sentence in English and Tamil
ஆங்கிலம் மற்றும் தமிழில் வாக்கியம் அமைப்பது எப்படி?
Sentence making involves combining words into a group that expresses a complete thought.
To make sentences,
- identify the "who" (subject),
- "what" (verb/action), and
- "where/when/to whom" (object),
then arrange them clearly, adding adjectives or adverbs for more detail while maintaining structure.
Generally sentences contain eight parts or few of them.
பொதுவாக வாக்கியங்கள் எட்டு பகுதிகளையோ அல்லது அவைகளில் சிலவற்றையோக் கொண்டிருக்கும்.
In those, three are very very important.
அவைகளில் மிக மிக முக்கியமானவை மூன்று.
They are - அவைகள்:
- Noun (பெயர்ச்சொல்)
- Pronoun (பொருட்பெயர்) and
- Verb (வினைச்சொல்)
Noun-ம், Pronoun-ம் ஆங்கில வாக்கியங்களில் Subject, Object என அழைக்கப்படுகிறது
Subject - S (பெயர்ச்சொல்) என்பது ஒரு நபரைக் குறிக்கும். அதாவது செயலைச் செய்பவரைக் குறிக்கிறது.
Object - O (பொருட்பெயர்) என்பது எங்கு, எப்பொழுது அல்லது யாருக்கு செய்கிறார் என்பதைக் குறிக்கிறது.
Verb -V (வினைச்சொல்) என்பது என்ன செய்கிறார் என்பதைக் குறிக்கிறது.
வாக்கிய அமைப்பு - Sentence Pattern
தமிழ் வாக்கிய அமைப்பு: (S O V)
- Subject(பெயர்ச்சொல்) - Object (பொருட்பெயர்) - Verb(வினைச்சொல்)
தமிழ் வாக்கியங்களில் முதலாவதாக பெயர்ச்சொல்லும் (S) அடுத்ததாக பொருட்பெயரும் (O) கடைசியாக வினைச்சொல்லும் (V) இடம்பெறும்.
ஆங்கில வாக்கிய அமைப்பு: (S V O)
- Subject(பெயர்ச்சொல்) - Verb(வினைச்சொல்) - Object(பொருட்பெயர்)
ஆங்கில வாக்கியங்களில் முதலாவதாக பெயர்ச்சொல்லும் (S) அடுத்ததாக வினைச்சொல்லும் (V) கடைசியாக பொருட்பெயரும் (O) இடம்பெறும்.
Example for SOV pattern in Tamil and SVO pattern in English
நீ அலுவலகத்திற்க்கு வா (S O V)You come to office (S V O)
Simple Example Sentences in English and Tamil with Subject(S), Verb(V) and Object(O) placements
- Chandru went to Office (SVO) - சந்துரு அலுவலகத்திற்க்குப் போனார் (பெ-பொ-வி)
- Mr.Maalai is a prudent person (S-Adjective-O) - Mr.மாலை ஒரு விவேகமுள்ள மனிதர் (பெ-பெயரடை-பொ)
- Who did this? (SVO) - யார் இதை செய்தார்? (பெ-பொ-வி)
- Lakshmi did this (SVO) - லட்சுமி இதை செய்தார்? (பெ-பொ-வி))
- Subramanian is a nice person (SVO) - சுப்பிரமணியன் ஒரு நல்ல மனிதர் (பெபொ-வி)
- Many benefitted from him (SVO) - அவரால் பலர் பயனடைந்தனர் (பெ-பொ-வி)
- Dr.Subbiah has organised the conference (SVO) - Dr.சுப்பையா மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார் (பெ-பொ-வி)
- Dr.Manickaraj will finish the work quickly (S-V-O- Adverb) - Dr.மாணிக்கராஜ் வேலையை விரைவாக முடித்துவிடுவார் (பெ-பொ-வினையடை-வி)
- Who told you? (SVO) - யார் உன்னிடம் கூறினார்? (பெ-பொ-வி)
- Maala told me (SVO) - மாலா என்னிடம் கூறினார் (பெ-பொ-வி)
- Who is that? (SO) - யார் அது? (பெ-பொ)
- That’s Lakshmi (SO) - அது லட்சுமி (பெ-பொ)
- Call them (VO) - அவர்களைக் கூப்பிடு (பொ-வி)
- Come in (V-Adverb) - உள்ளே வாங்க (வினையடை-வினைச்சொல்)
- I gave you Rs.500 (SVO) - நான் உனக்கு 500 ரூபாய் கொடுத்தேன் (பெ-பொ-வி)
- She goes slowly (S-V-Adverb) - அவள் மெதுவாக போகிறாள் (பெ-வினையடை-வி)
- Shankar gave me (SVO) - சங்கர் எனக்குக் கொடுத்தார் (பெ-பொ-வி)
Structure of Compound Sentence - கூட்டு வாக்கிய அமைப்பு
Conjunction(c) is a word that joins words or sentences(1,2) together.
வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை(1,2) ஒன்றாக இணைக்கும் சொல் இணைப்புச்சொல்(c) எனப்படும்.
Examples
2You trust me (SVO) cthat 1I won’t tell anyone (SVO) - 1நான் யாரிடமும் சொல்லமாட்டேன் (SOV) cஎன்று 2நீ என்னை நம்பு (SOV).
2The bell rang (OV) cwhile 1I was reading a book (SVO) - 1நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் (SOV) cபொழுது 2மணி அடித்தது (OV)
1My son wants to buy a new bike (SVO) cbut 2my husband doesn’t want to buy (SV) - 1என்னுடைய மகன் புது பைக் வாங்க விரும்புகிறான் (SOV) cஆனால் 2என்னுடைய கணவருக்கு வாங்க விருப்பம் இல்லை (SV).
Listening Practice
இந்த ஆடியோவில் உள்ள வாக்கியங்களைக் கேட்டு, தங்களின் கவனித்துக் கேட்கும் திறனையும், ஆங்கில உச்சரிப்பையும் மேம்படுத்துங்கள்.
Sentences
🎧 Listen - கேட்கவும்
Summary (English + Tamil explanation):
You have now learned Parts of Speech, sentence making, Sentence Pattern of English (SVO) and Tamil (SOV). Placement of Subject, Object, Verb in sentences is explained with simple examples. Practising sentence making will help you become more fluent and confident when speaking English.
நீங்கள் இப்போது பேச்சின் பகுதிகள், வாக்கியம் அமைத்தல், ஆங்கில வாக்கிய அமைப்பு (SVO) மற்றும் தமிழ் வாக்கிய அமைப்பு (SOV) ஆகியவற்றைக் கற்றுக்கொண்டீர்கள். வாக்கியங்களில் பெயர்ச்சொல், பொருள், வினைச்சொல்லின் இடம் ஆகியவை எளிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. வாக்கியம் அமைத்தலை பயிற்சி செய்வது ஆங்கிலம் பேசும்போது நீங்கள் சரளமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க உதவும்.
Practice tips
Keep practising by saying the example sentences aloud and using them in real life situations. Your command over sentence making forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the following words in Tamil and English:
- வா - come
- போ - go
- செய் - do
- உட்கார் - sit
- நில் - stand
- விலைக்கு வாங்கு - buy
- விற்பனை செய் - sell
People also learn:
👉 Active voice and Passive Voice
👉
How to ask location and routes?
- இடம் மற்றும் வழி கேட்பது எப்படி?
👉 Past Tense usage in English and Tamil
👉 Daily use conversations in English and Tamil
👉 Interview practice in English and Tamil
👉 Read the Hercules and the wagoner story in English and Tamil
