Auxiliary Verbs
துணை வினைச் சொற்கள்

துணை வினைச்சொற்கள் (அல்லது உதவும் வினைச்சொற்கள்) ஒரு முக்கிய வினைச்சொல்லுடன் காலம், மனநிலை, குரல் ஆகியவற்றைக் காட்ட அல்லது கேள்விகள் மற்றும் எதிர்மறைகளை உருவாக்குவதற்கு துணை வினைச்சொற்கள் துணைபுரிகின்றன, நேரம் (எ.கா., இயங்குகிறது), சாத்தியம் (செல்ல முடியும்), அல்லது கடமை (வெளியேற வேண்டும்) போன்ற இலக்கண அர்த்தங்களைச் சேர்க்கின்றன.

Auxiliary verbs (or helping verbs) support a main verb to show tense, mood, voice, or to form questions and negatives, adding grammatical meaning like time (e.g., is running), possibility (can go), or obligation (must leave).

Personal Pronoun - ஒருவர் அல்லது ஒன்றின் மாற்றுப்பெயர்

  1. You- நீ, நீங்கள், உனக்கு, உங்களுக்கு
  2. They - அவர்கள், அவைகள்
  3. I - நான்
  4. We - நாம், நாங்கள்
  5. He - அவன், அவர்
  6. She - அவள்
  7. It - அது, அந்த

Primary Auxiliary Verbs - முதன்மை துணை வினைச் சொற்கள்

  • am, is, are
  • was, were
  • has, have, had
  • do, does, did
  • be and been

Auxiliary verbs and Pronoun - துணை வினைச் சொற்கள் மற்றும் மாற்றுப்பெயர்கள்

am, is, are - நிகழ்காலத்தைக் குறிக்கும்.

am

Pronoun I - யுடன் வரும்.

is

he, she, it - டன் வரும்.

are

you, we, they - யுடன் வரும்.

was, were - இறந்தகாலத்தைக் குறிக்கும்.

was

I, he, she, it - டன் வரும்.

were

you, we, they - யுடன் வரும்.

has, have - நிகழ்கால முடிவுற்ற வினையைக் குறிக்கும்.

has

he, she, it - டன் வரும்.

have

I, you, we, they - யுடன் வரும்.

had - இறந்தகால முடிவுற்ற வினையைக் குறிக்கும்.

had

I, you, we, they, he, she, it - டன் வரும்.

do, does - நிகழ்கால வினையைக் குறிக்கும்.

does

he, she, it - டன் வரும்.

do

I, you, we, they - யுடன் வரும்.

did - இறந்தகால வினையைக் குறிக்கும்.

did

I, you, we, they, he, she, it - டன் வரும்.

be

எதிர்கால தொடர் வினைகளுடன் வரும்.

been

முடிவுற்ற தொடர் வினைகளுடன் வரும்.

Example Sentences using Primary Auxiliary Verbs

  1. நீயா? - Are you?
  2. நீங்களில்லையா? - Aren’t you?
  3. நீ யார்? - Who are you?
  4. நான் ஹரி - I am Hari.
  5. நான் திரு சந்திரசேகர் அவர்களின் மகன் - I’m son of Mr. Chandrasekar.
  6. நான் மாலைமதி - I am Malaimathi.
  7. நான் திரு சந்திரசேகர் அவாகளின் மகள் - I am daughter of Mr.Chandrasekar.
  8. நான் கல்லூரி மாணவி - I’m a College Student.
  9. நீ செய்தாயா? - Did you?
  10. நீ செய்யவில்லையா? - Didn’t you?
  11. உன்னால் முடியுமா? - Can you?
  12. உன்னால் முடியாதா? - Can’t you?
  13. நீ வருவாயா? - Will you come?
  14. நீ வரமாட்டாயா? - Won’t you come?
  15. நீ வருவாயா? மாட்டாயா? - Would you come? or not?
  16. நான் உன்னுடைய நண்பனா? இல்லையா? - Am I your friend or not?
  17. நீ என்னுடைய நண்பனா? - Are you my friend?
  18. நீ என்னுடைய நண்பன். நான் உன்னுடைய நண்பன் - You are my friend. I am your friend.
  19. யார் அவள்? அவள் உன்னுடைய சிநேகிதியா? - Who is she? Is she your friend?
  20. அவள் என்னுடைய சிநேகிதியல்ல. அவள் என்னுடைய சகோதரி - She is not my friend. She is my sister.
  21. யார் அவர்கள்? அவர்கள் உன்னுடைய உறவினர்களா? - Who are they? Are they your relatives?
  22. அவர்கள் என்னுடைய கல்லூரி நண்பர்கள் - They are my college friends.
  23. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? - Where are you from?
  24. நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா? - Are you from India?
  25. ஆமாம். நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் - Yes. I am coming from India.
  26. ஆமாம். நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் - Yes. I am from India.
  27. நீ யார்? நீ சீதாவா? - Who are you? Are you Seetha?
  28. ஆமாம். நான் சீதா - Yes. I am Seetha.
  29. நான் ராம் இல்லை. அவர் அங்கிருக்கிறார் - I am not Ram. He is there.
  30. உனக்கு விருப்பமா? - Are you interested?
  31. எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவர்களுக்கு விருப்பம் - I am not interested. But they are interested.
  32. நீ போகிறாயா? நீ எங்கு போகிறாய்? - Are you going? Where are you going?
  33. நான் போகிறேனா? நான் எங்கும் போகவில்லை - Am I going? I am not going anywhere.
  34. நான் மதுரைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் - I am going to Madurai.
  35. நான் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன் - I was going to Office.
  36. அவர்கள் ஒரு திருமணத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள் - They were going to a marriage.
  37. அவர்கள் மும்பைக்குப் போய்க்கொண்டிருப்பார்கள் - They will be going to Mumbai.
  38. நீ எங்கே? அவள் எங்கே? அவர்கள் எங்கே? - Where are you? Where is she? Where are they?
  39. நான் இங்கிருக்கிறேன். அவள் அங்கிருக்கிறாள் - I am here. She is there.
  40. அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் - They are in America.
  41. நீ எங்கிருந்தாய்? அவள் எங்கிருந்தாள்? அவர்கள் எங்கிருந்தார்கள்? - Where were you? Where was she? Where were they?
  42. நான் மதுரையில் இருந்தேன். அவள் வீட்டிலிருந்தாள் - I was in Madurai. She was at home.
  43. அவர்கள் எங்கிருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது - I don’t know where they were.
  44. அவர்கள் இங்கு தான் இருந்தார்கள் - They were here only.
  45. அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள் - They are here only.
  46. நான் போகிறேனா? நான் எங்கும் போகவில்லை - Am I going? I am not going anywhere.
  47. நீ என்ன செய்கிறாய்? நீ எப்படி செய்கிறாய்? - What do you do? How do you do?
  48. அவள் என்ன செய்கிறாள்? நாம் என்ன செய்கிறோம்? - What does she do? What do we do?
  49. நீங்கள் இங்கு இரத்தப் பரிசோதனை செய்கிறீர்களா? - Do you do blood tests here?
  50. உங்களுக்கு என்ன வேண்டும்? - What do you want?
  51. நீ செய்தாயா? அவள் செய்தாளா? - Did you do? Did she do?
  52. நீ என்ன செய்தாய்? நீ எப்படி செய்தாய்? - What did you do? How did you do?
  53. நீங்கள் ஏன் செய்தீர்கள்? - Why did you do?
  54. அவர் பீ.ஏ படித்திருக்கிறாரா? நீ பீ.ஈ படித்திருக்கிறாயா? - Has he studied B.A? Have you studied B.E?
  55. அவள் பீ.ஏ படித்திருக்கிறாள். நான் எதுவும் படித்திருக்கவில்லை - She has studied B.A. I have not studied anything.
  56. அவள் தையல் படித்திருந்தாளா? நீ இசை படித்திருந்தாயா? - Had she studied tailoring? Had you studied music?
  57. அவள் பிரன்ச் படித்திருந்ததில்லை. நான் பிரன்ச் படித்திருந்தேன் - She had not studied French. I had studied French.
  58. அவள் படித்துக் கொண்டிருக்கிறாள் - She is studying.
  59. அவள் படித்துக் கொண்டிருந்தாள் - She was studying.
  60. அவள் படித்துக் கொண்டிருப்பாள் - She will be studying.
  61. அவள் படித்துக் கொண்டிருந்திருப்பாள் - She would have been studying.
  62. அவர் நான்கு வருடமாக படித்துக் கொண்டிருந்திருக்கிறார் - He has been studying for four years.
  63. நான் நான்கு வருடமாக படித்துக் கொண்டிருந்திருக்கிறேன் - I have been studying for four years.
  64. நான் நான்கு வருடமாக படித்துக் கொண்டிருந்திருந்தேன் - I had been studying for four years.
  65. நான் ஆறு மணி வரை காத்துக் கொண்டிருந்திருப்பேன் - I would have been waiting till 6’o clock.

Example Sentences using modal auxiliary verbs

  1. நீ வருவாயா? அவள் வருவாள் - Will you come? She will come.
  2. நீ வரமாட்டாயா? நான் வரமாட்டேன் - Won’t you come? I won’t come.
  3. அவர்களால் வரமுடியுமா? அவளால் வரமுடியாதா? - Could they come? Can’t she come?
  4. அவர்களால் வரமுடியாது. ஆனால் அவளால் வரமுடியும் - They can’t come. But she can come.
  5. என்னால் வரமுடியும். எங்களால் வரமுடியாது - I can come. We can’t come.
  6. நான் வர வேண்டுமா? நான் வரட்டுமா? - Should I come? Shall I come?
  7. நீ உன்னுடைய பெற்றோருடன் வரவேண்டும் - You should come with your parents.
  8. நீ நன்றாகப் படிக்கவேண்டும் - You should study well.
  9. நான் உள்ளே வரலாமா? - May I come in?
  10. நிச்சயமாக. நீங்கள் வரலாம் - Of course. You may come.
  11. நான் இங்கே உட்காரலாமா? - May I sit here?
  12. நிச்சயமாக - Of course.
  13. நான் இப்பொழுது போகலாமா? - May I go now?
  14. இல்லை. கொஞ்ச நேரம் காத்திரு - No. Wait for sometime.
  15. இல்லை. ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள் - No. Wait for five minutes.
  16. அவள் வரக்கூடும் - She may come.
  17. அவள் நூலகத்தில் இருக்கக்கூடும் - She might be in the library.
  18. நான் கடையில் தான் சாவியை விட்டிருப்பேன் - I might have left the key in the shop only.
  19. நீங்கள் அவசியம் வரவேண்டும் - You must come.
  20. அவர்கள் இரண்டு மகிழுந்துகள் வைத்திருக்கிறார்கள் - They have two cars.
  21. அவர்களுக்கு சொந்த வீடு இருக்கிறது - They have own house.
  22. எனக்கு நிறைய வேலையிருக்கிறது - I have lot of work.
  23. எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள் - I have a son and a daughter.
  24. உனக்கு ஏதாவது செய்யவேண்டிய வேலை இருக்கிறதா? - Do you have any work to do?
  25. எனக்கு செய்யவேண்டிய வேலை கொஞ்சம் இருக்கிறது - I have some work to do.
  26. எனக்கு செய்யவேண்டிய வேலை எதுவும் இல்லை - I don’t have any work to do.
  27. அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை - They don’t have any worries.
  28. என்னிடம் பணம் இல்லை - I don’t have money.
  29. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை - I have no problem.
  30. அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை - She doesn’t have any problem.
  31. அவருக்கு அலுவலகத்தில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது - He has some problem in office.
  32. என்னிடம் ஒரு நல்ல யோசனை இருக்கிறது - I have a good idea.
  33. என்னிடம் ஒரு யோசனையும் இல்லை - I don’t have any idea.
  34. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் - You have to work hard.
  35. நான் போக வேண்டியதில்லை - I don’t have to go.
  36. அவள் வாங்க வேண்டியதில்லை - She doesn’t have to buy.
  37. நீங்கள் முதல்வரை சந்திக்கவேண்டும் - You have to meet the principal.
  38. நீங்கள் இதைப்பற்றி யோசிக்கவேண்டும் - You have to think about this.
  39. நீ அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை - You don’t have to think about them.
  40. அவள் இதை மாற்ற வேண்டும் - She has to change this.
  41. அவர் அவருடைய நடத்தையை மாற்ற வேண்டும் - He has to change his behaviour.
  42. நான் இதை மாற்ற வேண்டியதில்லை - I don’t have to change this.
  43. நீங்கள் வர வேண்டும் - You have to come.
  44. நீங்கள் வர வேண்டியதில்லை - You don’t have to come.
  45. நீங்கள் நேரில் வர வேண்டியதில்லை - You don’t have to come in person.
  46. நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் - You have to do something.
  47. நான் என்ன செய்ய முடியும்? - What can I do?
  48. உங்களால் நிறைய செய்ய முடியும் - You can do a lot.
  49. நீ என்ன விரும்பினாலும் உன்னால் செய்ய முடியும் - You can do whatever you want.
  50. நீங்கள் அவசியம் வர வேண்டும் - You must come.
  51. நாங்கள் அவசியம் போக வேண்டும் - We must go.
  52. நான் கட்டாயம் செய்ய வேண்டும் - I must do.
  53. நீ வரக் கூடாது - You should not come.
  54. நான் உனக்குச் சொல்லும் வரை நீ தொடங்கக் கூடாது - You must not begin until I tell you.
  55. நான் உங்களுக்குச் சொல்லும் வரை நீங்கள் போகக்கூடாது - You must not go until I tell you.
  56. நீங்கள் இப்பொழுது கலைந்து செல்லலாம் - You can disperse now.
  57. நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம் - You can go home.
  58. நீங்கள் அங்கே இருங்கள் - You be there.
  59. நீங்கள் அங்கேயே இருங்கள் - You be there itself.
  60. நான் அங்கே தான் இருந்தேன் - I was there only.
  61. நான் அங்கேயே இருப்பேன் - I will be there itself.
  62. நீங்கள் அங்கு இருக்கவேண்டும் - You have to be there.
  63. நீங்கள் திடமாக இருங்கள் - You be strong.
  64. நீங்கள் திடமாக இருக்க வேண்டும் - You have to be strong.
  65. விவேகத்துடன் இரு - Be sensible.
  66. மற்றவர்களிடம் கருணையுடன் இரு - Be kind to others.
  67. அவள் புத்திசாலியாகத் தெரிகிறாள் - She seems to be intelligent.
  68. நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும் - You have to be sharp.
  69. மாலை 5 மணிக்கு அங்கு இருங்கள் - Be there at 5 p.m.
  70. மாலை 5 மணிக்கு நீங்கள் அங்கு இருக்கவேண்டும் - You have to be there at 5 p.m.
  71. 5 மணிக்கு நான் அங்கு இருக்க முயற்சி செய்வேன் - I will try to be there at 5’o clock.
  72. 5 மணிக்கு நீங்கள் அங்கு தவறாமல் இருக்க வேண்டும் - You should be there at 5’o clock without fail.
  73. மாலை 5 மணிக்கு நான் அங்கு தவறாமல் இருப்பேன் - I will be there at 5 p.m without fail.
  74. நீங்கள் உறுதியாக இருப்பீர்களா? - Are you sure?
  75. உறுதியாக நான் அங்கு இருப்பேன் - Surely I will be there.
  76. நான் அங்கு இருக்கமாட்டேன் - I won’t be there.
  77. மன்னிக்கவும். என்னால் அங்கு இருக்க முடியாது - Sorry. I can’t be there.
  78. நான் நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும் - I have to be in Chennai at 5 p.m tommorrow.
  79. அவர்களாலும் அங்கு இருக்க முடியாது - They too can’t be there.
  80. அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் - They are in America.
  81. சரி. நான் இப்பொழுது போகவேண்டும். உங்களைப் பிறகு பார்க்கிறேன். பை - Ok. I have to go now. See you later. Bye.
  82. சரி. போய் வாருங்கள் - Ok. Good bye.

Summary (English + Tamil explanation):

You have now learned many auxiliary verbs and how it is used with different pronouns and different tenses using simple examples. Practice the simple examples in daily life to improve Spoken English with ease.

இப்போது நீங்கள் பல துணை வினைச்சொற்களைக் கற்றுக்கொண்டீர்கள், மேலும் எளிய எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி அவை வெவ்வேறு மாற்றுப்பெயர்கள் மற்றும் வெவ்வேறு காலங்களுடன் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கற்றுக்கொண்டீர்கள். அன்றாட வாழ்வில் எளிய எடுத்துக்காட்டுகளைப் பயிற்சி செய்து ஆங்கிலத்தில் பேசுவதை எளிதாக மேம்படுத்துங்கள்.

Practice tips

Keep practising by saying the simple examples aloud and using them in real life situations. Your command over auxiliary verbs forms a solid base for more advanced English skills.

Do it yourself

Try to make sentences using the following auxiliary verbs:

  • is
  • were
  • has
  • have
  • will
  • may
  • can


Learn the rules for writing in present, past and future tense | Practice common Phrases with examples